By 8 February 2013 0 Comments

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம்

mahinda-thiruppathiஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவூக்கான விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புத்தகய, திருப்பதி ஆகிய சமய தலங்களுக்கும் செல்லவூள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவூ குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்றுபிற்பகல் 1.30அளவில் சென்னையில் உள்ள இலங்கை வங்கி கிளை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டது. முகத்தை மூடியநிலையில் வந்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, வங்கியின் உடமைகள் சிலவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவூம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் உள்ள இலங்கை வங்கி கிளை காரியாலயம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



Post a Comment

Protected by WP Anti Spam