ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி

Read Time:5 Minute, 55 Second

ind.karuna-protest4_CIராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அனைத்து கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே, இன்று மாலை திருப்பதி வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பு சார்பில் வள்ளூவர் கோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

திமுக பொருளாளர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி., சுப.வீரபாண்டியன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில், ராஜபக்சே வருகையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கையில் தமிழ் கலாச்சாரம், தமிழ் பெயர்கள், தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களின் தமிழ் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன. மொழியையும், இனத்தையும் அழிக்க சிங்கள அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. ராஜபக்சேவுக்கு பாடம் புகட்டவே தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஒற்றுமையுடன் போராடினால் வெற்றிக் கிடைக்கும். முன்னர் ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்” என்று கூறினார்.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கறுப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர். ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான ‘டெசோ’வின் சார்பில் கரறுப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கரறுப்பு உடையில் குவிந்தனர்.

டெசோ அமைப்பை சேர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கரறுப்பு உடையில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, “சர்வதேச போர்க்குற்றவாளி எனப்படுகிற ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். திருச்சியில் நடைபெற்ற லட்சக்கணக்கான மக்கள் கூடிய மாபெரும் கூட்டத்தில் இன்று சொல்லும் கருத்துகளை விரிவாக விளக்கியிருக்கிறேன். அதிலே முக்கியமான ஒன்று தமிழர்களின் கலை, கலாச்சாரம், இலக்கியம் பண்பாடு, மொழி அனைத்தையும் அழிக்கிற- கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபக்ஸ அரசு வெறியாட்டம் போடுகிறது என்பதை விளக்கியிருந்தேன். நாம் கண்போல் காத்த அருமைத் தமிழ் மொழியும் அடையாளம் தெரியாமல் ஆக்கப்படுகிறது. தமிழ்ப் பெயரிலான கிராமங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக ராஜபக்ஸவின் கொடுங்கோலால் அழிக்கப்பட்டு மாற்றுப் பெயர் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் தமிழகத்தில் திருப்பெரும்புதூர் உள்ளிட்ட ஊர்களின் பெயர்களில் எப்படி ஸ்ரீ என்ற வடமொழி எழுத்தைப் புகுத்தினார்களோ அவ்வாறு சிங்கள மொழியில் ஊர்ப் பெயர்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க முடியாது என்று கூறுகிற ராஜபக்ஸ அரசைப் பற்றி மத்திய அரசு இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்கரைப்பற்றில் 800 கிலோ திருக்கை மீன் பிடிபட்டது
Next post சுவிட்சலாந்து வெள்ளைப் பெண் திருமணத்தால், யாழ் குடும்பப் பெண் இந்தியாவில் மரணம்!