சவூதி அரேபியாவில் சூனியம் செய்த இலங்கையருக்கு தண்டனை

Read Time:1 Minute, 51 Second

Ani,chicken_blows_upசவூதி அரேபிய ரியாத்தில் தனது நண்பருடன் சேர்ந்து சூனியம் செய்யூம் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பணியாளர் ஒருவருக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 100 கசயடியூம் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. சவூதியில் வீட்டு சாரதியாக பணிபுரிந்த பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி என்பரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. சூனியம் செய்து உள்நாட்டு சட்டத்தை மீறியதோடு இனந்தெரியாத பெண்ணோடு இணைந்து செயற்பட்டதாகவூம் துங்கசிறிமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பதியத்தலாவ பகுதியைச் சேர்ந்த துங்கசிறிக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். இவ்வருடம் மே மாதம் துங்கசிறி தனது ஒருவருட கால சிறை தண்டனையை நிறைவூ செய்வார் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னிப்பு வழங்கப்படுவோர் பட்டியலில் துங்கசிறியின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவூம் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அவர் நாடு கடத்தப்படுவார் எனவூம் சவூதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தனது இந்த வழக்கில் தூதரகமோ பணிபுரிந்த வீட்டு உரிமையாளரோ எவ்வித உதவியூம் செய்யவில்லை என துங்கசிறி குற்றம் சுமத்தியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் விபத்து! பெண் படுகாயம்
Next post (VIDEO) யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்