By 12 February 2013 0 Comments

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (12.02.2013)

Raasipalan-003
மேஷம்:
இன்று, உங்கள் மனதில் சாந்த குணமும் நிறைந்திருக்கும். உறவினர் செய்த உதவிக்கு, நன்றி செலுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில், மங்கல நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்:
இன்று, நிறைவேற்ற வேண்டிய பணிகளை, தகுந்த திட்டமிடுதலுடன் செய்வீர்கள். அனுகூல சூழ்நிலை அமைந்து உதவும். தொழில், வியாபாரம் செழித்து உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்:
இன்று, உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடின பணிகளில் தகுந்த பாதுகாப்பு, நடைமுறை பின்பற்ற வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற, கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். முக்கியமான செலவுகளுக்கு, சிறிதளவு பணக்கடன் பெறலாம். இல்லறத்துணை உதவிகரமாக நடந்து கொள்வார்.

கடகம்:
இன்று, உங்களுக்கு அறிமுகம் இல்லாத எவரிடமும், பொது விஷயம் பேசவேண்டாம். திட்டமிட்ட பணிகளில், தகுந்த கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். காலமுறை உணவுப்பழக்கம் பின்பற்றுவதால், உடல் நலம் சீராகும்.

சிம்மம்:
இன்று, உங்கள் மனநிலை உற்சாகத்துடன் இருக்கும். தகுதி, திறமையை கூடுதலாக வளர்த்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழித்து, புதிய அனுபவம் தரும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

கன்னி:
இன்று, உங்கள் வாழ்வில் உண்மை, நேர்மையை கூடுதலாக மதித்து நடப்பீர்கள். நண்பர், உறவினர் தகுந்த ஊக்கம் தருவர். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான பணி மேற்கொள்வீர்கள். சராசரி, பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். பெண்கள், குழந்தைகளின் நலன் சிறக்க, கூடுதல் பாசத்துடன் தகுந்த உதவி புரிவர்.

துலாம்:
இன்று, உங்களுக்கு அவசரப்பணி ஒன்று ஏற்படலாம். சொந்த தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் பிறரது செயலால், இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரி அளவில் இருக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

விருச்சிகம்:
இன்று, நீங்கள் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். குணம் கெட்ட மனிதர் ஒருவரிடம், பேச்சை தவிர்ப்பதால் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை, கவனமுடன் செயல்படுத்த வேண்டும்.

தனுசு:
இன்று, மனதில் அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரியினால் உருவான இடையூறுகளை, சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். சராசரி பணவரவுடன், நிலுவைப்பணமும் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும்.

மகரம்:
இன்று, நீங்கள் எதிர்பாராமல் சந்திக்கின்ற முக்கியஸ்தரிடம் சில விஷயம் பேசுவீர்கள். அவரிடம் எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிலவுகின்ற அனுகூலத்தன்மைகளை கவனமுடன் பாதுகாப்பது நல்லது. பணப்பரிவர்த்தனை சுமுகமாக இருக்கும். அதிக பயன் தராத பொருள், நிர்பந்தத்தின் பேரில் வாங்கவேண்டாம்.

கும்பம்:
இன்று, நீங்கள் ஒருவரிடம் முன்னர் கேட்ட உதவி, எதிர்பாராமல் வந்து சேரும். திட்டமிட்ட பணி நிறைவேறி, தகுந்த நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி வியத்தகு முன்னேற்றம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள், சலுகை விலையில் வாங்குவீர்கள்.

மீனம்:
இன்று, உங்கள் மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேசவேண்டாம். தொழில், வியாபார இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். புத்திரரின் செயல், நல்லவிதமாக அமைந்து மனதில் சாந்த குணம் ஏற்படும்.



Post a Comment

Protected by WP Anti Spam