எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைவதா? தமிழ்க் கூட்டமைப்பு விரைவில் முடிவூ
Read Time:1 Minute, 28 Second
எதிர்க்கட்சிகள் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திடுவது பற்றி முடிவூஎடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடித் தீர்மானம் எடுக்குமென்று அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடி பத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணியின் புரிந்துணர்வூ உடன்படிக்கையில் கையொப்பம் இடுவது பற்றி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும். அதன் பின்னரே எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வூ உடன்படிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையெழுத்திடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சேர்ந்த கூட்டணி ஒன்றை அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம். எதற்கும் கூட்டமைப்பின் செயற்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து தான் முடிவூ எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Average Rating