மலேசிய பிரதமருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக

Read Time:2 Minute, 8 Second

Malaysia.Flag.jpgமலேசிய பிரதமர் படாவி காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மலேசியா நாட்டில் சட்டப்படியான ஆட்சி கடுமையாக பின்பற்றப்படுகிறது. சட்டத்தை மீறியவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது. அந்த நாட்டு பிரதமரும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

பிரதமர் அப்துல்லா அகமது படாவி ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு இருக்கிறார். அவர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், நான் வேகமாக கார் ஓட்டியதற்காக எனக்கு போலீசார் அபராதம் விதித்து இருக்கிறார்கள். 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா இப்போது தான் என்னிடம் தெரிவித்தார். இந்த அபராதத்தை திங்கட்கிழமை கட்டிவிடுவேன் என்று கூறினார்.

மலேசியாவில் அபராதத்தை தபால் மூலம் கட்டலாம். பிரதமர் மீது 11 போக்குவரத்து குற்றங்களுக்காக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவற்றில் 5 குற்றச்சாட்டுகள் வேகமாக கார் ஓட்டியதற்கு ஆகும். 4 குற்றச்சாட்டுகள் போக்குவரத்துக்கு இடைïறு ஏற்படுத்தியதற்காகவும், 2 குற்றச்சாட்டுகள் காரைத்தவறான இடத்தில் நிறுத்தியதற்காகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

போக்குவரத்து குற்றங்களில் அவரது அதிகாரப்பூர்வமான காரும் அவருக்கு சொந்தமாக உள்ள 2 கார்களும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 84 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் கிரீன் கார்டு ்
Next post அமெரிக்கா மீது மீண்டும் பயங்கர தாக்குதலை நடத்துவோம்: அல்கொய்தா மிரட்டல்