கர்ப்பினி இளவரசியின் பிகினி படங்கள்! இங்கிலாந்து அரசக் குடும்பம் அதிர்ச்சி (VIDEO)

Read Time:2 Minute, 10 Second

uk.kissஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸும் கர்ப்பம் உண்டாகியிருக்கும் அவரது இளம் மனைவியும் கரிபியன் தீவுகளுக்கு ஒய்வுக்காக போயிருக்கிறார்கள். அங்கு ஒரு கடற்கரையோரம் உல்லாசமாயிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள் சீ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் படங்களில் இளவரசி கேட் மிடில்டன் பிகினி நீச்சல் உடை அணிந்திருக்கிறார். அவர் நான்கு மாத கர்ப்பமாய் இருப்பதால் அவரது வயிறு பகுதி உப்பி காணப்படுகிறது. தனது வலது கையால் கணவர் வில்லியம்ஸை அணைத்துக் கொண்டு கடற்கரையில் உலாவுகிறார். இவர்கள் இருவரும் போனது ஆட்கள் வராத தனித் தீவு என்று கூறப்படுகிறது. அங்கிருந்து படங்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

இந்தப் பட விவகாரம் தெரிந்ததும் இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர் வருத்தம் அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கர்ப்பினியை இப்படி படம் எடுத்து வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்று அவர்கள் கேட்பதாக இங்கிலாந்து அரண்மனை வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

தனக்கு எங்குமே அந்தரங்கமே இல்லாமால் போய்விட்டது என்று இளவரசர் வில்லியம்ஸ் தெரிவித்தாராம்.

அந்தப் படக் கட்டுரைக்கு ’கேட்டும் வில்லியம்ஸும் – மூவருக்கான தேன்நிலவில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் புகைப்படங்களை வெகு தூரத்தில் படகை நிறுத்தி சக்தி வாய்ந்த புகைப்படக் கருவி மூலம் படம் பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நித்திக்கு மஹாநிர்வானி அகாரா அமைப்பினரால் கௌரவம்
Next post (14/02/2013) இன்றைய நாள் இனிதே தொடங்க வாருங்கள் ராசி பலன் பார்க்கலாம்!