By 14 February 2013 0 Comments

(14/02/2013) இன்றைய நாள் இனிதே தொடங்க வாருங்கள் ராசி பலன் பார்க்கலாம்!

Raasipalan-001
மேஷம்:
இன்று, உங்கள் வாழ்வில் இடையூறு செய்கிற ஒருவரை அறிந்து கொள்ள வாய்ப்பு வரும். பணிகளை திறம்பட செய்வதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலுவைப்பணம் வசூலாகும். முக்கிய வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

ரிஷபம்:
இன்று, உங்களின் தகுதி, திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி பெறும். தொழில், வியாபாரம் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். கூடுதல் பணவரவு கிடைக்கும். விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்:
இன்று, நீங்கள் உண்மை,நேர்மை குணம் அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சி பெறும். உபரிபணவரவை தகுந்த சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்:
இன்று, உங்களின் முக்கிய தேவைக்காக கருணை மனம் இல்லாதவரிடம் <உதவி கேட்க வேண்டாம். தொழில், வியாபார நடைமுறையில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். பணச்செலவில், அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை தருவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதியை பெற <உதவும். சிம்மம்: இன்று, உங்களுக்கு சிலர் சொல்லும் அறிவுரை, தர்மசங்கடம் உருவாக்கும். புதிய முயற்சிகளை பின் ஒரு அனுகூல நாளில் துவங்கலாம். தொழில், வியாபாரத்தில் சராசரி நிலை இருக்கும். கிடைக்கிற பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள், சமரச பேச்சுகளில் இதமான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது. கன்னி: இன்று, உங்களைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள். கடந்த நாளில் அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபணம் பெற நல்யோகம் உண்டு. துலாம்: இன்று, உங்களின் செயலில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அன்புக்கு உரியவர்கள் மனம் உவந்து பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டு. வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். விருச்சிகம்: இன்று, கெடுமதி உள்ள ஒருவர், உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். சமயோசிதமான செயல் நன்மை பெற உதவும். தொழில், வியாபாரம் சீர்பெற அதிகம் பணிபுரிய நேரிடலாம். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல்நல ஆரோக்கியத்திற்கு தகுந்த உணவு உண்ணலாம். தனுசு: இன்று, உங்கள் மனதில் சஞ்சலம் தோன்றி கஷ்டப்படுத்தும். பகைமை குணம் உள்ளவரை, அடையாளம் கண்டு விலகுவது நல்லது. தொழில், வியாபார வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய தேவைக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். விலை மதிப்புள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மகரம்: இன்று, உங்கள் நண்பரின் உதவியால், பெருமை கொள்வீர்கள். மனதில் உற்சாகமும், செயலில் புதிய பரிமளிப்பும் உருவாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையை உணர்ந்து செயல்படுவீர்கள். நிலுவைப்பணம் இனிய அணுகுமுறையால் எளிதில் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். கும்பம்: இன்று, உங்கள் உறவினரின் கூடுதல் அன்பு, தொந்தரவு தருவது போல தோன்றும். முக்கிய பணி ஒன்று நிறைவேறுவதில், தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் நடைமுறையில் முழு ஈடுபாடு அவசியம். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உடல்நலத்திற்கு சிறு அளவில் மருத்துவ சிகிச்சை உதவும். மீனம்: இன்று, உங்களிடம் முன்னர் பெற்று நன்மை மறந்த ஒருவரை மன்னிப்பீர்கள். சமூக நிகழ்வு புதிய அனுபவம் தரும். தொழில், வியாபாரம் செழிக்க இஷ்டதெய்வ அருள் பலம் துணை நிற்கும். கூடுதல் பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.Post a Comment

Protected by WP Anti Spam