(photos) மட்டு மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை, சில இடங்களில் வெள்ளம் ஊடறுக்கிறது! மக்கள் அவதி!

Read Time:1 Minute, 45 Second

IMG_5789-600x450மட்டு மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பொழிந்து வருவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்தழை நீர் தேங்கி காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கடும் மழை பெய்து வருவதனால் இம்மாவட்ட மக்கள் பலத்த சிரமத்தினைஎதிர் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவடத்தில் தற்போது வேளாண்மை நெல் அறுவடை ஆரம்பிக்கப் பட்டுள்ளதனால் நூற்றுக்கணக்கான வேளாண்மை; வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் கடும் மழை பெய்து வருவதனால் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, ஆரையம்பதி,காத்தான்குடி, மட்டடக்கள்பு நகர், ஏறாவூர், பட்டப்பளை, போன்ற பிரதேசங்களிலுள்ள பல கிராமங்கள் மழை நீரினால் முற்றாக சூழ்ந்து காணப்படுவதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்கும் மற்றும் சேவைகளுக்கும் பல இடர்களை எதிர் கொண்டு வருகின்றனர். இது இவ்வாறு இருக்க மண்டூர் வெல்லாவெளி வீதி,வெல்லாவெளி-பாலையடிவட்டைவீதி, பலாச்சோலை வீதி போன்றவற்றினை ஊடறுத்து வெள்ளம் பாய்வதனால் இவ்வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது, தடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.









Share News:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (14/02/2013) இன்றைய நாள் இனிதே தொடங்க வாருங்கள் ராசி பலன் பார்க்கலாம்!
Next post பாரிஸ் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஆட்டம் போட்ட ‘அரை நிர்வாண’ பெண்கள்!! (Photos)