கொழும்பில் சுடப்பட்ட புலனாய்வுச் செய்தியாளர் சௌகத்அலி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர்

Read Time:3 Minute, 54 Second

ANI.Pistrol.1சண்டேலீடர் வாரஇதழில் எழுதப்பட்ட புலனாய்வுக் கட்டுரையின் விளைவாகவே ஊடகவியலாளர் பரஸ் சௌகத்அலி சுடப்பட்டுள்ளதாக, சண்டேலீடர் ஆசிரியர் சகுந்தலா பெரேரா தெரிவித்துள்ளார்.

சுடப்பட்ட சௌகத்அலி சண்டேலீடரில் புலனாய்வுச் செய்திகளை எழுதி வருபவர் என்றும், அத்தகைய செய்திகளால் தான் அவர் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூன்று மர்மநபர்கள் நேற்றிரவு அவரது வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் படுகாயமடைந்த பரஸ் சௌகத் அலி களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பரஸ் செளகத்அலி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அறுவைச்சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பரஸ் செளகத்அலி தங்கிருந்த விருந்தினர் விடுதியின் அறையை உடைத்துக் கொண்டு நுழைந்த, மூன்று அடையாளம் தெரியாத நபர்களே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

சண்டே லீடரில் புலனாய்வுக் கட்டுரைகளை ஏழுதி வரும் 52 வயதான சௌகத்அலி, இந்தவார இதழுக்கான கட்டுரை ஒன்று தொடர்பாக, சக நண்பருடன் தொலைபேசியில் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இவர் பிரித்தானிய மற்றும் சிறிலங்கா குடியுரிமை பெற்றவராவார்.

தன்னுடன் சௌகத்அலி உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்தின் பின்னர் தொலைபேசியில் அழைத்த அவர், தன்னை மூன்று பேர் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சண்டேலீடரில் பணியாற்றும் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரத்தம் தோய்ந்த நிலையில் சௌகத்அலி உதவி கோரி அழைத்ததாக அந்த விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஏனைய வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியக் குடியுரிமைபெற்ற சௌகத்அலி சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் கவலை வெளியிட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால், எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்தும் படி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீரப்பன் நண்பர்களது மறுசீரமைப்பு மனு தள்ளுபடி: இன்று தூக்கு ?
Next post வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் தொலைபேசி மிரட்டலின் பின் குத்திக் கொலை