இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (17.02.2013)

Read Time:31 Second

Raasipalan-001
மேஷம்:
இன்று, எந்த செயலையும் நிதானத்துடன் செய்வீர்கள். பிறரை வசீகரிக்கின்ற அளவில், செயல்திறன் வளரும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாகும். லாப விகிதம் அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி கிடைக்க நல்யோகம் <உண்டு. ரிஷபம்: இன்று, பிறரிடம் பேசுவதில் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில், கூடுதல் பணிச்சுமை உருவாகும். பணவரவை முக்கியமான செலவுக்கு பயன்படுத்துவீர்கள். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். மிதுனம்: இன்று, உங்கள் இஷ்டதெய்வ அருளால், புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். கடந்தகால உண்மை சம்பவத்தை, நண்பரிடம் விவரித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து, சமூகத்தில் அந்தஸ்து கூடும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். கடகம்: இன்று, பிறருக்கு உதவுவதில் ஆதாயம் கருதாமல் செயல்படுவீர்கள். உங்களின் நல்ல குணத்தால், பயன் பெற்றவர் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி பணி சிறப்பாக நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். விருந்து விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். சிம்மம்: இன்று, நிதானித்து பேசுவதால், எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். முக்கியமான பணியை, தனிக்கவனத்துடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை நல்லது. சுற்றுப்புற சூழ்நிலையால், நித்திரை செய்யலாம். கன்னி: இன்று, நிறைவேற்ற வேண்டிய, அத்தியாவசிய பணி ஒன்றை மறந்து விடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உதவியால், செயல் நிறைவேறும். தொழில், வியாபாரம் சுமுகமாக இருக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிய இனங்களில் பணச்செலவு வரலாம். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. துலாம்: இன்று, <உங்கள் மனதில் ஆன்மிக சிந்தனையும், கருணை நிறைந்த குணமும் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தவருடன் கூடுதல் அன்பு வளரும். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். விருச்சிகம்: இன்று, உங்கள் அன்புக்கு உரியவரின் தேவைக்கு உதவுவீர்கள். மதிப்பு, நட்பு வளரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். தனுசு: இன்று, உங்களால் நிறைவேற்ற இயலாத விஷயங்களில், எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில், மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். முக்கியமான செலவுக்கு. சேமிப்பு பணம் பயன்படும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.சீரான ஓய்வு உடல்நலம் காக்க உதவும். மகரம்: இன்று, உங்களின் சொந்த விஷயம், பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில், நிலுவைப் பணி அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நலம் பாதுகாக்க உதவும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். கும்பம்: இன்று, உங்களுக்கு எதிரியினால் உருவான தொல்லை குறையும். புதிய செயல்களை நிறைவேற்ற, ஆர்வமுடன் திட்டமிடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில், நல்ல முன்னேற்றம் உண்டு. தாராள அளவில், பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரண சேர்க்கை பெற நல்யோகம் உண்டு. மீனம்: இன்று, நண்பரின் விமர்சனம், உங்களை மனம் தளரச் செய்யலாம். குடும்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுத்துவது அவசியம். தொழில், வியாபாரத்தில், திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். அத்தியாவசிய தேவைக்கு பணம் கிடைக்கும். அதிக விலை மதிப்புள்ள பொருள்களை, கவனமுடன் பயன்படுத்துவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் தொலைபேசி மிரட்டலின் பின் குத்திக் கொலை
Next post வீட்டாரை காப்பாற்றி பரிதாபமாக உயிர் நீத்த கிளி