அமெரிக்கா மீது மீண்டும் பயங்கர தாக்குதலை நடத்துவோம்: அல்கொய்தா மிரட்டல்

Read Time:1 Minute, 51 Second

AlHaida.Usa.jpgபயங்கர தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என்று அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் கடுமையாக எச்சரித்து உள்ளது. எங்கள் தலைவர் ஜர்குவாய் மரணமடைந்த பின்னரும் நாங்கள் இன்னும் சக்திவாயந்தவர்களாக இருக்கிறோம் என்று ஒரு இணையதளத்தில் அல்கொய்தா சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்கா மீது நாங்கள் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம். இந்த தாக்குதலானது பூகம்பம் மாதிரி எதிரியை நிலைகுலையச் செய்யும். அமெரிக்கர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று நாங்களும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜார்ஜ் கசே கூறினார். அவர் தற்போது ஈராக்கில் இருக்கிறார். இந்த தாக்குதலை முறியடிக்க தகுந்த ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறோம். ஈராக்கில் உள்ள அமெரிக்க படை உஷார்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜெனரல் ஜார்ஜ் கூறினார். அதே சமயத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை முழுமையாக தடுத்து நிறுத்த முடியாது என்றும் ஜார்ஜ் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மலேசிய பிரதமருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் காரை வேகமாக ஓட்டிச்சென்றதற்காக
Next post தென் சீனாவில் கனமழைக்கு 93 பேர் பலி