இன்றைய ராசிபலன்கள்:18.02.2013

Read Time:8 Minute, 19 Second

Raasipalan-002
மேஷம்
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் குடும்பத்தினரை பற்றி வெளி நபர்களிடம் குறைக் கூறி பேச வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

மிதுனம்
கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் கோபப்படுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

கடகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

சிம்மம்
இன்றைய தினம் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமாக நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

கன்னி
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

துலாம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

விருச்சிகம்
விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன் -மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

தனுசு
இன்றைய தினம் திருப்திகரமாக இருக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

மகரம்
காலைப் பொழுதிலிருந்தே மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வாகனப் பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

கும்பம்
நீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

மீனம்
காரியங்களை முடிப்பதிலிருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சோம்பல், உடல் அசதி, நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கோபம் தணியும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திம்பில்ல வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயம்
Next post கலிகாலம்: மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்