தொடர்ச்சியாக 58 மணிநேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்த காதல் ஜோடி!

Read Time:1 Minute, 52 Second

thailandதாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்’ போட்டி நடைபெற்றது. சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்க வேண்டும். உணவு மற்றும் திரவ பானங்களை உறிஞ்சுகுழல் (ஸ்டிரா) மூலமாக தான் உட்கொள்ள வேண்டும். இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும் பொருத்திய உதடுகளை பிரிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் எக்காச்சாய் திரணார்த் (44) என்பவர் தனது மனைவி லக்சனா (33)வுடன் களமிறங்கினார்.

கின்னஸ் சாதனைகளை பதிவு செய்யும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகளுக்கு ஒருவரையொருவர் கட்டித்தழுவியபடி, தொடர்ந்து முத்தங்களை பரிமாறிக்கொண்ட இந்த தம்பதியர், முந்தைய நீண்ட, நெடிய முத்த சாதனையை விட 8 மணி நேரம் அதிகமாக முத்தமிட்டு புதிய சாதனையை படைத்துள்ளனர்.

சுமார் 2 1/2 நாட்களாக நின்ற நிலையில் இந்த தொடர் முத்த சாதனையை படைத்த இவர்களுக்கு 2 வைர மோதிரங்களும், 3 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.

thailand

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிலாபம் வீடொன்றில் திடீர் வெடிப்பு: இளைஞனுக்கு எரிகாயம்
Next post 5 வயது சிறுவன் மீது 18 வயது இளைஞன் பாலியல் துன்புறுத்தல்