இந்தியத் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்த மாலைதீவு!

Read Time:1 Minute, 22 Second

indiaமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 13-ம் திகதி தஞ்சம் அடைந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்திய தூதரகத்தினை கடுமையாக குற்றம்சாட்டிய மாலைத்தீவு அரசு, இந்திய தூதரை அழைத்து கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்திய தூதர் டி.எம்.முலேயை இன்று அழைத்த மாலைதீவு வெளியுறவு அமைச்சகம், அவரிடம் நஷீத்திற்கு தஞ்சம் அளித்ததற்காக கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை கொடுத்துள்ளது. அப்போது நசீத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நசீத் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது சிறுவன் மீது 18 வயது இளைஞன் பாலியல் துன்புறுத்தல்
Next post பாலியல் குற்றவாளிகளை வித்தியாசமாக தண்டிக்கும் விசித்திர கிராமம்!