புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட முன்பும் கொல்லப்பட்ட பின்பும்…

Read Time:6 Minute, 21 Second

ltte.pirabakaran-sonபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட முன்பும் கொல்லப்பட்ட பின்பும்… பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய, 53ஆவது படையணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் குணரத்னவின் பட்டாலியினால் சுட்டுக் கொல்லப்பட்டார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், கொலை செய்யப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்களை உறுதிப்படுத்தும் வகையிலான மேலும் பல புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரே கமராவில் எடுக்கப்பட்ட இரண்டு படங்களைப் பார்க்கும் போது, முதலாவது படத்தில் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவத்தினரின் பங்கர் ஒன்றில் அமர்ந்திருப்தைப் போலும், சில மணி நேரத்தின் பின் எடுக்கப்பட்ட மற்றைய படத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதையும் இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

2009 மே மாதத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள், இலங்கை இராணுவத்தினர் மனிதகுலத்திற்கெதிராக மேற்கொண்ட கொடுரத்திற்கான சாட்சியாக விளங்குகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட மேலும் பல மனித உரிமை அமைப்புக்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

யுத்தத்தின் போது ஏற்பட்ட மோதல்களின் போதே பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கூறிவந்தது.

இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்கள் பொய் என்பதற்கு இந்தப் புகைப்படங்கள் உறுதியான ஆதாரங்களாக இருக்கின்றன.

இந்தப் புகைப்படங்கள் உள்ளடங்களாக இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான புதிய வீடியோ ஆதாரமான No fire zone எனப் பெயரிடப்பட்டுள்ள ‘போர்ச் சூன்யப் பிரதேசம்’ என்ற ஆவணப் படம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் இடம்பெறவுள்ள மனித உரிமை தொடர்பான திரைப்பட விழாவில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் பொய்யானவை அல்ல எனவும் இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது பாலச்சந்திரன் மீது மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை உறுதியாவதாகவும் புகைப்பட மற்றும் யுத்தம் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகைப்படத்தில் உள்ள பாலச்சந்திரனின் உடலில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஒரே கமராவில் எடுக்கப்பட்டவை எனவும், இந்த புகைப்படங்களுக்கு கிடையிலான கால இடைவெளி மற்றும் ஒளித்தன்மை ஆகியவற்றைக் கணக்கிடும் போது சில மணி நேரங்களுக்குள் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமை உறுதியாவதாகவும் புகைப்பட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து www.independent.co.uk இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள  “No fire Zone’ எனப் பெயரிடப்பட்டுள்ள ”யுத்த சூன்யப் பிரதேசம் என்ற ஆவணப்படத்தின் இயக்குனர் கெலன் மெக்ரே,

இந்தப் புகைப்படங்கள் பாலச்சந்திரன் கொலை தொடர்பாக கிடைத்துள்ள முக்கிய தடயங்கள் ஆகும். பாலச்சந்திரன் யுத்தத்தின் போதோ, யுத்த களத்திலோ கொல்லப்படவில்லை என்பதும் இந்தப் புகைப்படங்களின் மூலம் உறுதியாவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினர் பாலச்சந்திரனை இராணுவ பங்கர் ஒன்றில் தடுத்துவைத்திருப்பதையே இந்தப் புகைப்படங்கள் மிகத் தெளிவாக காட்டுகின்றன. அவருக்கு பிஸ்கட் உண்ண கொடுத்துள்ளனர். இதன்பின்னர் மிக அருகில் இருந்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதை இந்தப் புகைப்படங்கள் உறுதிசெய்கின்றன.

4ஆவது விஜயபாகு படையணியினால் சிறைபிடிக்கப்பட்ட பாலச்சந்திரன் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய, 53ஆவது படையணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் குணரத்னவின் பட்டாலியினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக 2012 ஆண்டு JUNE மாதம் 14ஆம் திகதி முதன்முறையாக செய்தி வெளியாகியிருந்தது.

ltte.pirabakaran-son
ltte.pirabakaran-son2
ltte.pirabakaran-son1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதி அரேபியாவின் இளவரசி புகைப்படம் பிடிக்கும் புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு)
Next post இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (19.02.2013)