By 19 February 2013 0 Comments

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (19.02.2013)

Raasipalan-001
மேஷம்:
இன்று, உங்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். கால விரயம் ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. புதிய யுக்தியில் தொழில், வியாபார வளர்ச்சி நிலை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். பிறர் பார்வையில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம்.

ரிஷபம்:
இன்று,செயல்களில் மதிநுட்பம் பின்பற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய வாய்ப்பு தேடி வரும். தொழில்,வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை செழிக்கும். உபரி பண வருமானம் பெறுவீர்கள். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.

மிதுனம்:
இன்று, பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிருங்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். பணவரவை, சிக்கன முறையில் செலவு செய்வது நல்லது. உடல்நலத்திற்கு ஒவ்வாத, உணவு வகை <உண்ண வேண்டாம். நண்பருடன், வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். கடகம்: இன்று, உங்கள் மனதில் <உற்சாகம் நிறைந்திருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும். சிம்மம்: இன்று, உங்கள் மனதில் பலநாள் இருந்த குழப்பமான சூழ்நிலையை, சரி செய்வீர்கள். முன்னர் செய்த நற்செயலுக்கான, பலன் தேடி வரும். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். குடும்பத்தின், முக்கிய தேவையை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். இஷ்டதெய்வ அருள் பலம் துணை நிற்கும். கன்னி: இன்று, உங்கள் செயல் நிறைவேற, நலம் விரும்புவோரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வீர்கள். தொழில்,வியாபாரத்தில் இருந்த சிரமம் சூழ்நிலை சரியாகும். சராசரி பணவரவு கிடைக்கும். புதிய இனங்களில், பணச் செலவு ஏற்படலாம். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவது நல்லது. துலாம்: இன்று, உங்களிடம் எதிர்மனப்பாங்குடன் பேசுபவரிடம் விலகுவது நல்லது. தாமதமான செயல்களை, நிறைவேற்ற வேண்டிய நிர்பந்த சூழ்நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரம் சீர் பெற அதிக நேரம் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் எதுவும் வாங்க வேண்டாம். விருச்சிகம்: இன்று, உங்கள் மனதில் ஒருமுகத் தன்மை அதிகரிக்கும். நண்பர், உ<றவினர்களிடம் அன்பு, பாசத்துடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி, இனிதே நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விரும்பிய உணவு வகை உண்டு மகிழ்வீர்கள். தனுசு: இன்று, உங்களின் எண்ணத்தில் உற்சாகமும், செயல்களில் புதிய பரிமளிப்பும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகம் பணிபுரிவீர்கள். லாபவிகிதம், எதிர்பார்த்ததை விட கூடுதலாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு இயன்ற உதவி புரிவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, பணி சிறந்து பாராட்டு, வெகுமதி வந்து சேரும். மகரம்: இன்று, புதிதாக உருவாகிற அவசரப்பணி, மனதுக்கு கஷ்டத்தை தரும். நண்பரின் உதவியால் நிலைமையை சரிசெய்வீர்கள். தொழில்,வியாபார நடைமுறை சீராக, கூடுதல் முயற்சி உதவும். அளவான பணவரவு கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். கும்பம்: இன்று, சிலர் சொல்லும் தேவையற்ற அறிவுரை, மனதில் தர்மசங்கடத்தை உருவாக்கும். புதிய முயற்சியை, பின் ஒரு அனுகூல நாளில் துவங்குவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். அரசியல்வாதிகள், சமரச பேச்சுக்களில், இரு தரப்பு நியாயம் உணர்ந்து பேசுவது நல்லது. மீனம்: இன்று, செயல்களை மனப்பூர்வமாக துவங்குவீர்கள். வெகுநாள் எதிர்பார்த்த நன்மை, எளிதாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெண்களுக்கு, தாய் வீட்டு உதவி பெற அனுகூலம் உண்டு.Post a Comment

Protected by WP Anti Spam