இன்றைய ராசிபலன்கள்:20.01.2013

Read Time:8 Minute, 45 Second

Raasipalan-003
மேஷம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

ரிஷபம்
இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

கடகம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்

சிம்மம்
பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

கன்னி
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

துலாம்
இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினரை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

தனுசு
இன்றைய தினம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்து வீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

மகரம்
புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

கும்பம்
இன்றைய தினம் எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்துபணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சித் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தலைவலி, வாயுக் கோளாறு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

மீனம்
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் !! (PHOTOS)
Next post பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத குற்றம்: தமிழக முதல்வர்