கூட்டமைப்பு பிரித்தானியா செல்கிறது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவூக்கான விஜயத்தை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விஜயத்தினை மேற்கொள்கின்றனர். அனைத்துலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவூள்ளது எதிர்வரும் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகவூள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரித்தானியா செல்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.