இந்திய படைகளை சுட்டுக்கொன்று புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் – மஹிந்த

Read Time:2 Minute, 31 Second

slk.mahinthaயாழ். வலி. வடக்கில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள் எனவும் அதற்குள் சில தனியார் காணிகள் உள்ளதாகவும் காணி உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைப்படி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

இன்று (23) காலை பலாலியில் நடைபெற்ற இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு பின்னர் பத்திரிகையாலர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக 5 தடவைகளாக மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி உள்ளோம். இன்னும் குறைந்தலாவான மக்களே குடியேற்றபட வேண்டியுள்ளார்கள். அவர்களையும் விரைவில் குடியேற்றுவோம்.

பலாலி விமான நிலையத்துக்காக எடுக்கப்பட்ட காணிகளில் பெரும் பகுதி அரசாங்க காணிகளே. குறைந்தளாவான காணிகளே தனியாருடையது. அக்காணி உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைக்கு நஷ்டஈடு வழங்கப்படும்.

அதேவேளை, 1987 ஆம் ஆண்டு மருத்துவ பீட மைதானத்திற்குள் பரசூட் மூலம் தரையிறங்கிய இந்திய இராணுவ வீரர்களை விடுதலைப்புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சுட்டு கொன்றது போர் குற்றம்.

சர்வதேச போரியல் விதிகளின் படி வீரர்கள் பரசூட் மூலம் தரையிறங்கிய பின்னரே அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளலாம். ஆனால் புலிகள் அவர்கள் தரை இறங்க முதல் அந்தரத்தில் வைத்தே சுட்டு கொன்றுள்ளார்கள். இது சர்வதேச போரியல் விதிமுறைகளை தாண்டிய போர்க்குற்றம் ஆகும் என தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய அமைதிப்படையினருக்கு யாழில் அஞ்சலி
Next post மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்: பதிலுக்கு மாமியார் கையை உடைத்த மருமகள்