By 26 February 2013 0 Comments

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (26.02.2013)

Raasipalan-001
மேஷம்:
இன்று, உங்கள் செயல்களில் மேம்போக்கான குணம் நிறைந்திருக்கும். முக்கிய பணி நிறைவேற்றுவதில், கூடுதல் பங்களிப்பு அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நடைமுறை பணச்செலவு அதிகிரிக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன்தராத பொருள் வாங்கவேண்டாம்.

ரிஷபம்:
இன்று, சிரம சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து மனம் வருந்துவீர்கள். நேர்மை குணம் அதிகம் பின்பற்றுவதால், ஓரளவு நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில், பணம் செலவு செய்ய நேரிடலாம். சீரான ஓய்வு உடல் நலம் காக்கும்.

மிதுனம்:
இன்று, உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூலக் காரணி பலம் பெறும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசுப் பொருள் தருவார்.

கடகம்:
இன்று, கடந்த நாட்களில் உங்களிடம் உதவி பெற்ற ஒருவர், நன்றி மறந்து அலட்சியமாக பேசுவார். குடும்ப உறுப்பினர், உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி படிப்படியாக முன்னேற்றம் பெறும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

சிம்மம்:
இன்று, முக்கியமான செயல் ஒன்றில், கூடுதல் கவனம் கொள்வீர்கள். அனுகூல சூழ்நிலை அமைந்து, நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை செழிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி:
இன்று, உங்கள் மனதில் இனம்புரியாத கவலை உருவாகலாம். வாழ்வியல் சிரமம் சரி செய்ய, நல்லவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவு பெறுவதில் இருந்த தாமதம் விலகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

துலாம்:
இன்று, உங்கள் பேச்சில் உறுதியான குணம் நிறைந்திருக்கும். சிலரது பொறாமை குணம் உள்ள விமர்சனத்தை பொருட்படுத்தமாட்டீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள வளர்ச்சி உண்டு. ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்:
இன்று, உங்கள் வாழ்வில் கூடுதல் முன்னேற்றம் பெற, புதிய வழிபிறக்கும். வியத்தகு அளவில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில், புதிய சாதனை இலக்கு பூர்த்தியாகும். கூடுதல் பணவரவில், குடும்பத்தேவை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர், நிர்வாக நடைமுறை சிறப்பு பெற, நல்ல ஆலோசனை சொல்வர்.

தனுசு:
இன்று, உங்களின் கடந்த கால கஷ்ட சூழ்நிலையை, பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பில், தகுந்த கவனம் பின்பற்ற வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்பதால், மருத்துவச் செலவு தவிர்க்கலாம். எதிர்பார்த்த சுப செய்தி வர தாமதமாகும்.

மகரம்:
இன்று, எவருக்கும் தகுதிக்கும் மீறிய வாக்குறுதி தராதீர்கள். தொழில், வியாபாரத்தில், மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவாக இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். இல்லறத் துணையின் ஆறுதல் வார்த்தை, மனதுக்கு நம்பிக்கை தரும். இயந்திர தொழிற்சாலை பணியாளர், பாதுகாப்பு நடைமுறையில் தகுந்த கவனம் கொள்ள வேண்டும்.

கும்பம்:
இன்று, உங்களிடம், சிலர் அனுகூலம் பெற முயற்சி செய்வர். இயன்ற அளவில் உதவிபுரிந்து அன்பை பெறுவீர்கள். ö தாழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு சலுகைப் பயன் கிடைக்கும்.

மீனம்:
இன்று, உங்கள் சிந்தனையில், புதுமை எண்ணம் நிறைந்திருக்கும். எவரிடமும் அளவுடன் பேசி, நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறு விலகும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள்.Post a Comment

Protected by WP Anti Spam