அசுத்த நீரை பருகும் நுவரெலியா கெர்க்கஸ்வோல்ட் மக்கள்
Read Time:51 Second
நுவரெலியா, ஹற்றனை அண்மித்துள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவூதோட்ட மக்கள் அசுத்தமான குடிநீரை பருகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் நீர் தாங்கியானது சுத்தம் செய்யப்படாமையினால் அன்றாட தேவைக்கு பெறும் நீர் அசுத்தமடைந்து காணப்படுகிறது. இது குறித்து தோட்ட நிர்வாகத்திடம் பலதடவை அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating