சர்ச்சையைக் கிளப்பியுள்ள தென்னாபிரிக்க பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம்! (VIDEO)

Read Time:2 Minute, 12 Second

ANI.Police.2தென்னாபிரிக்காவில் நபரொருவரை பொலிஸார் தமது வாகனத்தில் கட்டி வைத்து இழுத்துசென்ற சம்பவத்தின் காணொளியானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் பின்னர் சிறையில் உயிரிழந்தமையானது பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளது.

தென்னாபிரிக்காவின், ஜொஹனர்ஸ்பேர்கிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள டொவிடொன் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் உயிரிழந்த நபர் 27 வயதான மொசாம்பிக் நாட்டு பிரஜையெனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் ஒரு வாகன சாரதியெனவும் அவர் தனது வாகனத்தை தவறான இடத்தில் நிறுத்தி வைத்தமைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நபரைக் கைது செய்த பொலிஸார் பின்னர் அவரது கைகளை தமது வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸாரின் இக் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டுக்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் அதையும் மீறி பொலிஸார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அந்நபர் சிறைச்சாலையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்க பொலிஸாரின் இந்நடவடிக்கைக்கு பலர் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘மோதலின் சூன்ய வலயம்’; திரையிடுவதை தடுக்க பேரவை மறுப்பு
Next post பள்ளிவாசல் வீதி புனரமைப்புக்கான நினைவூப் படிகம் உடைப்பு