மணிவிழா கொண்டாடிய மு.க. ஸ்டாலின்: தொண்டர்கள் வாழ்த்து (PHOTOS & VIDEO)

Read Time:3 Minute, 1 Second

ind.stalin.manivilaசென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாளையொட்டி மணி விழா திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்தும்  வந்த திமுக தொண்டர்கள்  ஸ்டாலினுக்கு  வாழ்த்துத் தெரிவித்தனர்.

மணிவிழா

ஸ்டாலின் மணிவிழா நிகழ்ச்சி அடையாறு ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பட்டு வேட்டி, சட்டையுடன் மு.க.ஸ்டாலினும், பட்டுப்புடவை அணிந்து அவரது மனைவி துர்காவும் மேடைக்கு வந்தனர். கருணாநிதி முன்னிலையில் மு.க.ஸ்டாலினும் துர்கா ஸ்டாலினும் மாலை மாற்றிக் கொண்டனர். துர்காவுக்கு மங்கல நாணையும் ஸ்டாலின் அணிவித்தார்.

இதையடுத்து இருவரும் கருணாநிதி மற்றும் அன்பழகன் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒய்.எம்.சி.ஏ.

பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த மணி விழா நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு 60 கிலோ எடையுள்ள ‘கேக்கை தொண்டர்கள் மத்தியில் வெட்டினார். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்து குவிந்தனர். வரிசையில் நின்று தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை “பணக் குடை”

மணி விழாவையொட்டி தேர்தல் நிதி வழங்குவதற்காக தனி உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் தொண்டர்கள் தேர்தல் நிதியாக ஏராளமான பணம் போட்டனர். மதுரையில் இருந்து வந்த தி.மு.க. தொண்டர்கள் 1000 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட குடையை மு.க.ஸ்டாலினுக்கு பரிசளித்தனர். தென் சென்னை மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி 60 ஆயிரம் ரூபாய் கொண்ட மாலையை மு.க.ஸ்டாலினுக்கு அணிவித்து வாழ்த்து பெற்றார்.






Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!…
Next post கடற்படை வீரர்களின் மனைவிமாரின் பங்களிப்பில் உருவான நிர்வாண கலண்டர்கள்! (photos)