திருநெல்வேலியில் புலிகள் கிரனேட்வீச்சு. துப்பாக்கிச்சு10டு.; 9 பொதுமக்கள் காயம்

Read Time:2 Minute, 11 Second

jaffana-map.gifதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிரனேட் வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தினால் 9 பொதுமக்களும் இ,ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.திருநெல்வேலி, பலாலி வீதியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கிரனேட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து படையினரும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இத்தாக்குதலில் சிக்கி காயமடைந்த 9 பொதுமக்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொதுமக்களில் பலருக்கு துப்பாக்கிச் சு10ட்டு காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாக்குதலையடுத்து திருநெல்வேலி சந்தி மற்றும் சந்தைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தாக்குதலில் உரும்பிராயைச் சேர்ந்த பிரதீபன் சிவசாந்தி (வயது 24), கொக்குவிலைச் சேர்ந்த வி. விஜயகுமார் (வயது 40), என். ரவீந்திரராஜா (வயது 54), டி. திவாகரன் (வயது 26), திருநெல்வேலியைச் சேர்ந்த இ,ரா. பிரசாந் (வயது 13), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. சிவநாதன் (வயது 23), எம். முருகமூர்த்தி (வயது 45) மற்றும் என். வசந்தன் (வயது 23) ஆகிய9 பேரே காயமடைந்தவர்களாவர்.

இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதன்போது பலர் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கூட்டுப் படைத் தளபதியாக டொனால்ட் பெரேரா
Next post சினைப்பர் தாக்குதலில் புலிகளின் குடும்பிமலை பொறுப்பாளர் பலி