By 6 March 2013 0 Comments

மனிதாபிமான பிரச்சினையில் கௌரவம் பார்க்கத் தேவையில்லை -குர்ஷிட்

ANI.indiaflag.1ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களிக்க வேண்டும் என இந்திய தமிழ்க்கட்சிகள் வற்புறுத்திவரும் நிலையில் தான் எடுக்கப்போகும் நிலைப்பாடு தொடர்பில் இந்தியா தன் நழுவல் போக்கை தொடர்ந்துபேணி வருகின்றது. அமெரிக்காவூடன் இணைந்து செயற்படுமாறு மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தால் அதை அமெரிக்காவிடம் விளக்கி சகலருக்கும் திருப்தியான ஒரு பிரேரணையை தயாரிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் தான் கூறியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். இது ஒரு மனிதாபிமான பிரச்சினை இதில் யாரும் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பர் என்று கவலைப்படவேண்டிய அவசியமில்லை. இயலுமாயின் அவர்களுடன் நேரில் பேசி யாவருக்கும் ஏற்புடைய தீர்மான வரைவை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் மேலும் கூறியூள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam