By 8 March 2013 0 Comments

மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

Ani.minnalமின்னல் தாக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இடி தாக்கத்தில் சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை அப்பிரதேசத்தில் கடும் மழையுடன் கூடிய மழை நிலவியுள்ள நிலையில், குறித்த இளைஞன் வேறு சிலருடன் மாதம்பை, கடுபிட்டிஓயா எனும் பிரதேசத்திற்பு அருகில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதன் பின்னர் உடனடியாக அவர் மாதம்பை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

Protected by WP Anti Spam