சீனாவில் படுபயங்கரமான பரவிவரும் ‘ஃபயர் பேஷியல்’ (VIDEO)
முகம் மற்றும் உடலில் திகுதிகுவென நெருப்பை எரிய வைக்கும் படுபயங்கர பேஷியல் சிகிச்சை சீனாவில் பரவி வருகிறது. பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது பேஷியல் சிகிச்சை. முகத்தில் கிரீம் தடவி காயவிடுவார்கள். காய்ந்த பின்பு அகற்றினால், முகம் பளபளப்பாகும். சுருக்கங்கள் நீங்கும்.
வெள்ளரி, மூலிகை, நீராவி என இதில் ஏகப்பட்ட வகைகள். சீனாவில் ‘ஃபயர் பேஷியல்’ என்ற அதிபயங்கர பேஷியல் சிகிச்சை முறை தற்போது பரவி வருகிறது.
சீன மொழியில் ‘ஹூ லியாவ்’ என்கிறார்கள். பெண்ணை படுக்க வைத்து, ‘ஸ்பெஷல் அமிர்தம்’ என அழைக்கப்படும் கிரீமை முகம் முழுக்க தடவுகிறார்கள். பின்பு, ஆல்கஹாலில் நனைத்த டவலால் முகத்தை மூடுகிறார்கள்.
பின்னர், கற்பூரம் போல ஏதோ ஒரு கட்டியை இரு கண்களுக்கும் நேர் மேலாக டவல் மீது வைத்து எரியவிடுகிறார்கள். திகுதிகுவென்று தீ எரிகிறது. இதன்மூலம், ஸ்பெஷல் அமிர்தம் சூடாவதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள், தேவையற்ற அழுக்குகள், கரும்புள்ளிகள் நீங்குகின்றன. புத்துணர்ச்சி கிடைக்கிறது. முகம் இளமையாகிறது என்கின்றனர் அழகு சிகிச்சை நிபுணர்கள்.
நெருப்பு எரிவதால் தோல் கருகிவிடும் என பயப்பட வேண்டாம். தோலுக்கு இதமான சூடு மட்டுமே கிடைக்கிறது. உடல் முழுக்க ஹூ லியாவ் சிகிச்சை செய்துகொண்டால், இளமை திரும்பும். உடல் எடை குறையும். சளி, இருமல் பாதிப்புகள் நீங்கும். நெருப்பு சம்பந்தமான சிகிச்சை என்பதால் கவனமாக செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர்.
Average Rating