புலிகளின் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் பிரதேசசபை செயலாளர் காயம்.

Read Time:1 Minute, 35 Second

Vvuniya+Small.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் இன்று காலை 10மணிக்கு இடம் பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் நெடுங்கேனிப் பிரதேசசபையின் வாகனம் சேதத்திற்குள்ளானது இதில் சென்ற நெடுங்கேனிப் பிரதேசசபை செயலாளபர் பரந்தாமன் சிறு காயம் அடைந்ததாகவும் வாகனத்தின் சாரதியான நல்லதம்பி பாலசிங்கம் கடுமையான காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார் எனவும் வவுனியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியா செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் இன்று காலை 8.15 மணிக்கு வீதிப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது இதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அவ்வீதியால் சென்று கொண்டிருந்த பொதுமகன் செல்வரத்தினம் சிறிதரன் (40) காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சினைப்பர் தாக்குதலில் புலிகளின் குடும்பிமலை பொறுப்பாளர் பலி
Next post தமிழ் நாட்டு அகதி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகள் மரணம்