மேஜர் ஒருவர் நடேசனின் மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.. -நேரில் பார்த்த சாட்சி

Read Time:2 Minute, 36 Second

ltte.nadesan-001வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களில் நடேசனும் ஒருவர். அவர் கொல்லப்பட்டது தொடர்பில் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தற்போது சாட்சியமளித்துள்ளார். நடேசன் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த சிப்பாய்களால் பொல்லுகள் கொண்டு தாக்கப்பட்டதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். பிறப்பில் சிங்களவரான அவரது மனைவி, “நான் ஒரு சிங்களப் பெண். என்னைக் கொல்லாதீர்கள்” என அழுது புலம்பும் போதே சுட்டுக் கொன்றார்கள் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சாட்சியமளித்துள்ளார். தற்போது லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ள, இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த சில விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுமக்கள் சிலரும் நேரில் கண்டவற்றை தெளிவுபடுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சாட்சியமளித்தவர்களை மேற்கோள் காட்டி, பி.பி.சி.யின் முன்னாள் செய்தியாளர் ப்ரென்சன் எரிசன் பின்வருமாறு தெரிவித்திருந்தார், அது “வினிதா சிப்பாய்களிடம் சிங்கள மொழியில் ஏதோ கூறி கதறி அழுது கொண்டிருந்தார்,” என்பதாகும்.

இரண்டாவதாக சாட்சியமளித்தவர், “வினீதா சிங்கள மொழியில் கதறி அழுதவராக, என்னைக் கொல்ல வேண்டாம்” என வேண்டி நின்றார். ”இப்போது தான் உனக்கு சிங்களம் ஞாபகம் வருகிறதோ, வே….” என தகாத வார்த்தையில் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த மேஜர் ஒருவர் வினிதா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அத்துடன் நடேசனை பொல்லுகளால் தாக்கிய பின் சுட்டுக் கொன்றனர்”, எனவும் இவர் தெரிவிக்கிறார். அங்கு நடைபெற்ற முழுத்தகவல்களையும் தெரிவிக்கும் அதேவேளை, அக்கொலைகளுக்குப் பொறுப்பானவர்களை தன்னால் அடையாளம் காட்டவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:13.03.2013
Next post 51 வயது அழகியின் உள்ளாடை போடாத உடம்பு! -படங்கள்-