பிராவில் ஒயினை நிரப்புங்க… ஒய்யாரமா நடை போடுங்க…
மார்பழகை பெரிதாக்கிக் காட்டவும், க்ளீவேஜை எடுப்பாக தெரிய வைக்கவும் பெண்களுக்காக ஒரு விசேஷ பிரா வந்துள்ளது. இந்த பிராவின் கப் பகுதியில் ஒயின் நிரப்பப்பட்டிருக்கிறதாம். இதை அணியும் போது க்ளீவேஜ் எடுப்பாக தெரியுமாம். இந்த ஒயினை தேவைப்பட்டால் எடுத்துக் குடிக்கவும் முடியுமாம். ஒயின்மட்டும் என்றில்லை, தங்களுக்குப் பிடித்த வேறு திரவங்களையும் கூட இதில் நிரப்பி வைத்துக் கொள்ள முடியுமாம்.
இந்த பிராவை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரூக்ஸ் லாம்பேர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் இந்த பிரா விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து விற்பனை மேலாளர் அனலிஸ் நிர் கூறுகையில், இதை நான் நிகழ்ச்சிக்கு அணிந்து போயிருந்தேன். ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றார் புன்னகையுடன்..
இந்த வித்தியாசமான பிராவில், சிறப்பு கப்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கால் லிட்டர் ஒயினை நிரப்ப முடியுமாம். இந்த ஒயின் நிரப்பப்பட்ட பின்னர் க்ளீவேஜ் மிகவும் எடுப்பாக தெரிகிறது. ஒயின் தீர்ந்து விட்டால், கப்பில் உள்ள வால்வைத் திறந்து மீண்டும் ஒயினை நிரப்பிக் கொள்ளலாம். இந்த வித்தியாசமான பிராவுக்கு இங்கிலாந்து பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
Average Rating