ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 நேட்டோ வீரர்கள் பலி

Read Time:1 Minute, 46 Second

Ani.Flight-Heli.1தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பயணம் செய்த . அதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். விபத்துக்காரன காரணம் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை. எனினும், அப்பகுதியில் எதிரிப்படைகளின் நடமாட்டம் ஏதும் காணப்படவில்லை என அங்கிருந்து வரும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் வீரர்களை கொண்ட நேட்டோ படை முகாமிட்டுள்ளது. பெரும்பாலும் வான்வழி போக்குவரத்தையே தாக்குதலுக்கு பயன்படுத்துவதால் ஹெலிகாப்டர் விபத்துகள் அங்கு அடிக்கடி நடைபெறுகின்றது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கந்தகர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு அமெரிக்க வீரர்கள் மற்றும் நான்கு ஆப்கானியர்கள் பலியானார்கள். அந்த விபத்துக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர் என்பத குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹன்சிகா மோத்வானியின் அழகான படங்கள்!
Next post கைவிடப்பட்ட குழந்தை மீட்பு