நிதர்சனம் நோர்வே சேது, லண்டன் ராஐன், உதயன் ஆகிய மூவரும் நிபந்தனை ஐhமீனில் விடுவிப்பு

Read Time:2 Minute, 45 Second

Spt-sethu1.jpg 08.06.06அன்றிரவு 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வேயில் இருந்து புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் சேது எனும் நடராஐh சேதுரூபன் மற்றும் ரைம்ரவல்ஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளர் சுதாவின் சகோதரர் உதயன் ஆகிய மூவரும் ரி.பி.சி வானொலி நிலையத்தை தாக்கி அங்கு வானொலி நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவேகானநதன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே.. இவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த சனிக்கிழமை (10.06.06) மூவரும் நிபந்தனை ஐhமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனரென அதிரடியின் லண்டன் நிருபர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புலிகளின் மஞ்சள்தர நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் நோர்வேசேது எனும் நடராஐh சேதுரூபன் லண்டன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தடைப்பட்டிருந்த நிதர்சனம் இணையத்தளத்தின் செய்திகள் மீண்டும் அவரது விடுதலையைத் தொடர்ந்து ‘பழையகிழவி கதவைத் திறவடி” என்பது போல் தனிநபர்கள் குறித்து கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் பொய்யான செய்திகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஒருவர் ‘இவர்களைப் போன்றவர்களுக்கு புரியக்கூடிய மொழியில் பேசினால் மட்டுமே இவர்கள் தம்மைத் திருத்திக் கொள்வார்களெனவும், ஆனால் மாற்றுக்கருத்து உடையவர்கள் ஐனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் இவர்கள் தமது மொழியில் பேசமாட்டார்கள் எனும் காரணத்தினாலேயே இவனைப் போன்றவர்கள் இப்படி நடப்பதாகத்” தெரிவித்தார்.

Thanks….WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பலகாரபெட்டி காவ வன்னியிலேயே ரைகட்டி, சூட்டுடன் புறப்பட்ட சுனா பனா!
Next post ஜப்பானை வீழ்த்தியது ஆஸ்ட்ரேலியா 3-1