இன்றைய ராசிபலன்கள்: 28.03.2013

Read Time:8 Minute, 46 Second

raasipalan-001
மேஷம்
இன்று கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

ரிஷபம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல்நிலைசீராக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல்நிலை சீராகும். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்
முகப்பொழிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் கடகம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்
இன்று மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் துலாம்
இன்று அதிகம் உழைக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். சொத்து விவகாரத்தில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

விருச்சிகம்
பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

தனுசு
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

மகரம்
இன்று எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

மீனம்
இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்து வீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்கள் இடமாற்றப்பட்டுள்ளன..
Next post இலங்கை பிரேரணை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்