இன்றைய ராசிபலன்கள்: 29.03.2013

Read Time:8 Minute, 39 Second

raasipalan-007
மேஷம்
புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும். வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்
இன்று எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்துபணம் வந்து சமாளிப்பீர்கள். பேச்சித் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தலைவலி, வாயுக் கோளாறு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

கடகம்
இன்று வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

கன்னி
இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்
இன்று வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் காரம் வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

தனுசு
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதவு கிட்டும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மகரம்
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

கும்பம்
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர் களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மீனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைமன்னாரில் மீன்பிடிக்க தடை, நடவடிக்கை எடுக்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை
Next post இலங்கை ஒரு ஆபத்தான நாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது -சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்