சிறையிலுள்ள தனது காதலியை வெளியில் கொண்டு வருவதற்காக தனது 6 வயதான மகளை விற்பதற்கு முயற்சி
Read Time:1 Minute, 15 Second
அமெரிக்காவின் கிங்ஸ்போர் நகரைச் சேர்ந்த தந்தையொருவர் சிறையிலுள்ள தனது காதலியை பிணையில் விடுதலை வெளியில் கொண்டு வருவதற்காக தனது 6 வயதான மகளை விற்பதற்கு முயற்சி செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சொவ்ன் வெயன் கியூக்ஸ் (32) எனும் தந்தை இவ்வாறு தனது மகளை விற்பதற்கு முயற்சித்துள்ளார். இதனால் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றலுக்கு முயற்சித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யபப்பட்டுள்ளார். சொவ்னின் காதலி ஜெஸிக்கா (27) கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கவனயீனம் காரணமாக கைது செய்யப்பட்டார். சொவ்ன் தனது மகளை 1500 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating