புசல்லாவையில் காதல் விவகாரமாக சிறுமியைக் கடத்தியவர் கைது
நுவரெலியா மாவட்டம் புசல்லாவ, மாவெல பகுதியில் 5வயது சிறுமியை கடத்திச்சென்று தலைமறைவாகிருந்த இளைஞன் ஒருவனை புசல்லாவ பொலிஸார் நேற்றுமாலை கைதுசெய்துள்ளனர். புசல்லாவ மாவெல பகுதியில் யுவதியொருவரை குறித்த இளைஞன் காதலித்துள்ளார். கடந்த சனிக்கிக்கிழமை இரவு காதலியின் வீட்டிற்குச் சென்ற இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்பு காதலியின் சகோதரியின் 5வயது சிறுமியை கடத்திக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். பின்னர் உறவினர்களால் புசல்லாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று விசாரணைகளை மேற்கொண்ட பொலீசார் நாவலப்பிட்டி, கெட்டபூலா பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றில் அவ்விளைஞன் மறைந்திருந்தபோது அவரைக் கைதுசெய்து சிறுமியையும் மீட்டுள்ளது.