மியன்மாரில் 50 ஆண்டுகளுக்கு பின் தனியார் நாளிதழ்

Read Time:3 Minute, 10 Second

433newsமியன்மார் நாட்டில் கடந்த 50 ஆண்­டு­கா­ல­மாக தனியார் நாளி­தழ்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நேற்­றுடன் முடி­வுக்கு வந்­தது. அந்­நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளி­தழ்கள் வெளி­வரத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

1964-ஆம் ஆண்டு நீவின் என்­ப­வ­ரது சர்­வா­தி­கார ஆட்­சியில் தனி­ந­பர்­களின் வர்த்­தகம் அனைத்தும் தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்­டது. இதில் பத்­தி­ரி­கை­களும் அடக்கம். அர­சாங்­கமே நாளி­தழ்­களை நடத்தி வந்­தது. நூற்­றுக்­க­ணக்­கான வார இதழ்கள் விளை­யாட்டு, பொழு­து­போக்கு, சுகா­தாரம் போன்­ற­வற்றை மைய­மாக வைத்­து வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த சில ஆண்­டு­க­ளாக மியன்மாரில் ஜன­நா­யக நடை­மு­றைகள் அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக 2 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஏ.எப்.பி செய்தி நிறு­வனம் தமது கிளையை யாங்­கூனில் அமைத்­தது. இதன் பின்னர் நேற்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனியார் நாளி­தழ்கள் வெளி­யிட அனு­மதி அளிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

1960களுக்குப் பின் பிறந்­த­வர்­க­ளுக்கு தனியார் நாளி­தழ்கள் எப்­படி இருக்கும் என்ற ஆர்­வத்தால் அவை விறு­விறு­ வென விற்றுத் தீர்ந்­தி­ருக்­கின்­றன.

அந்­நாட்டின் ஆளும் கட்சி சார்பில் த யூனியன், பிர­பல த வாய்ஸ் வார இதழின் சார்பில் ெவாய்ஸ் டெய்லி, த ஸ்டாண்டர்ட் டைம் டெய்லி, கோல்டன் ஃப்ரெஸ் லேண்ட் ஆகிய 4 நாளி­தழ்கள் நேற்று வெளி­யாகி இருக்­கின்­றன.

கோல்டன் ஃப்ரெஸ் லேண்ட் நாளிதழ் 80 ஆயிரம் பிர­தி­களை அச்­சிட்­ட­தா­கவும் அவை அனைத்­துமே விற்றுத் தீர்ந்­ததால் ஆனந்தக் கண்ணீர் வடிக்­கிறேன் என்று அதன் தலைமை செய்­தி­ ஆ­சி­ரி­ய­ரான 81 வயது கின் மெளங் லாய் கருத்து தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இவர்தான் பர்­மிய மொழி மூத்த பத்­தி­ரி­கை­யா­ள­ராக கரு­தப்­ப­டு­கி­றவர். 1964ஆம் ஆண்டு மோக்யோ என்ற பர்­மிய நாளி­தழில் பணி­யாற்­றி­யி­ருந்தார்.. இந்த அரை நூற்றாண்டு காலமாக இந்த ஒரு தருணத்துக்காகவே தாம் காத்திருந்தேன் என்றார் அவர். மேலும் பல நிறுவனங்களும் நாளிதழ்களை வெளியிட முன்வந்திருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழிச்சியின் தங்க மேனியில்…. தமிழீழத்தை மலர வைத்த தம்பி சீமான்!! (PHOTOS)
Next post (வீடியோவில்) மிருகங்களின் சேட்டைகளும், செய்கைகளும் ஒவ்வொரு விதம்!!