வெப்பமான காலநிலை ஏப்ரல் மாதயிறுதி வரை தொடருமென அறிவிப்பு

Read Time:1 Minute, 35 Second

Ani.hot-hotஇலங்கையில் தற்பொழுது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதிவரை நீடிக்குமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 5ம் திகதிமுதல் 15ம் திகதிவரை இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளதனால் எதிர்வரும் நாட்களில் வெப்பம் சற்று அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது.. கடந்த சில நாட்களாக நாட்டின் வெப்ப காலநிலை நிலவுகிறது. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் வெப்பமான காலநிலை நிலவூவதுடன் நுவரெலியா அடங்களான மத்திய மாகாணங்களிலும் வெப்பநிலை உயர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தினங்களில் மேல்இ சப்ரகமுவ மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் மாலைவேளைகளில் இடைக்கிடை சிறியளவில் மழைபெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மழையூடன் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் அது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. மே மாதத்தில் பருவமழை மீண்டும் ஆரம்பமாவதோடு வெப்ப காலநிலை படிப்படியாக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளர்ந்து வரும் உள்நாட்டு ஷகீலா !!! (PHOTOS)
Next post சித்திரவதைக்கு பயந்தே வந்தோம்; இந்தியாவில் இலங்கை இளைஞர்கள் தெரிவிப்பு