By 3 April 2013 0 Comments

சித்திரவதைக்கு பயந்தே வந்தோம்; இந்தியாவில் இலங்கை இளைஞர்கள் தெரிவிப்பு

Ind.tamilnaduஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்வதால் நாம் தமிழகத்திற்கு தப்பித்து வந்தோம் என இலங்கையிலிருந்து தமிழகம் இராமநாதபுரம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ள 3 இலங்கை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து சைபர் படகு மூலம் தனுஷ்கோடி சென்றடைந்த இலங்கை இளைஞர்களான பருத்திதுறை வீதியைச் சேர்ந்த வசந்தகுமார்(24), சாவகச்சேரியைச் சேர்ந்த விஜயராஜ்(26), முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த பிரசாத் (19) ஆகிய மூவருமே சைபர் படகில் மன்னார் கடல் பகுதியிலிருந்து தனுஷ்கோடி அருகே உள்ள கம்பிப்பாறை பகுதிக்கு நேற்று அதிகாலை சென்றடைந்த நிலையில் தமிழகம் பொலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam