பிரித்தானியாவில் மிகவும் பெரிய பர்கர் தயாரிப்பு
சுமார் 7,000 கலோரி கொண்ட பேர்கரை பிரித்தானிய நிறுவனமொன்று தயாரித்துள்ளது. ஒரு கிலோ இறைச்சி, 800கிராம் பனிஸ், 500 கிராம் சலட், 200 கிராம் சீஸ் ஆகியன இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள ‘எட்ஜ் பார்’ எனும் நிறுவனமே இந்த பேர்கரை தயாரித்துள்ளது. இதை தயாரிப்பதற்கு சுமார் இரு மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றனவாம். பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பேர்கர் இதுவாகும். இத்தகைய பேர்கரை முழுவதுமாக உட்கொள்வதற்கு பலர் முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களில் எவரும் வெற்றி பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒருவர் காற்பகுதியை மாத்திரம் உட்கொண்டுள்ளராம்.