தாக்குதல் மேற்கொண்ட புலிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோட்டம்

Read Time:2 Minute, 13 Second

JAFFNA-jalmavaddam.gifயாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி, தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இராணுவத்தின் பாதுகாப்பு நிலை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட புலிகள் இராணுவத்தினரின் பதில் தாக்குதலையடுத்து அவர்கள் கைவசமிருந்த ரி 56, துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம் நேற்று (12-06-2006) மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் இராணுவ காவலரண் மீது நேற்று காலை (12-06-2006) புலிகளால் கிரனேட் வீசப்பட்டுள்ளது சேதமெதுவும் ஏற்படவில்லை.

இதேபோல் யாழ் காக்காதீவில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவிலும், யாழ் உரும்பிராயில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவிலும், யாழ் இணுவிலில் நேற்று பிற்பல் 4.00 மணியளவிலும், யாழ் வடமராட்சி மூத்தவிநாயகர் கோவிலடியில் நேற்று பிற்பகல் 6.00 மணியளவிலும் இராணுவத்தினர் மீது புலிகள் மேற்கொண்ட கைக்குண்டுத்தாக்குலும், துப்பாக்கிப்பிரயோகத்தில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் அமைந்துள்ள காவலரண் மீது நேற்றிரவு (12-06-2006) 8.00 மணியளவில் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பதிலுக்கு பொலிசாரும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். சுமார் பத்து நிமிட நேரம் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தில் சேதவிபரம் பற்றிய தகவல் தெரியவில்லை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமானத்தாக்குதலில் காயத்துடன் தப்பிய ஜர்க்காவியை ராணுவம் அடித்துக் கொன்றது நேரில் பார்த்தவர் பேட்டி
Next post யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சுடு