குழந்தை பெற்ற ஆணுக்கு விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு

Read Time:6 Minute, 55 Second

452_aபெண்­ணாக பிறந்து ஆணாக பால் மாற்றம் செய்­து­கொண்டு பின்னர் கர்ப்பம் தரித்து குழந்­தை­களைப் பெற்­ற­வரின் விவா­க­ரத்து மனுவை அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று நிரா­க­ரித்­துள்­ளது. 39 வய­தான தோமஸ் பியட்டீ என்­பவர் பெண்­ணாக பிறந்தார். பின்னர் சத்­தி­ர­சி­கிச்­சைகள், ஹோர்மோன் சிகிச்­சைகள் மூலம் ஆணாக மாறினார். அவ­ருக்கு தாடி மீசையும் முளைத்­தது. நான்ஸி எனும் பெண்ணை திரு­மணம் செய்­து­ கொண்ட அவர், தானே கர்ப்பம் தரித்து மூன்று குழந்­தை­களை பெற்றார். இவர் ஆணாக மாறி­ய­போ­திலும் கர்ப்­பப்பை முத­லான இனப்­பெ­ருக்க உள் அங்­கங்கள் மாறாமல் இருந்­தன. இதனால் அவரால் கர்ப்பம் தரிக்க முடிந்­தது. உலகில் கர்ப்­பி­ணி­யாகி குழந்தை பெற்ற முதல் நபர் என அவர் அறி­யப்­பட்டார். ஆனால் நான்­ஸி­யு­ட­னான 9 வரு­ட­கால திரு­மண வாழ்க்கை தோமஸ் பியட்­டீக்கு இப்­போது வெறுத்­து­ விட்­டது.

ஆம்பர் நிகோல் எனும் பெண்ணை அவர் தற்­போது காத­லிக்­கிறார். இதனால் நான்­ஸியை விவா­க­ரத்து செய்­வ­தற்கு அரி­ஸோனா மாநி­லத்­தி­லுள்ள நீதி­மன்­ற­மொன்றில், தோமஸ் பியட்டீ மனு­தாக்கல் செய்தார். ஆனால், நீதி­பதி டக்ளஸ் ஜெர்லாக் இம்­மனுவை நிரா­க­ரித்­து­விட்டார். ஒரு பாலின திரு­ம­ணத்தை அரி­ஸோனா மாநிலம் தடை செய்­துள்­ளதால் தோமஸ் பியட்டீ – நான்ஸி திரு­ம­ணத்தை அங்­கீ­க­ரிக்க முடி­யாது எனவும் அந்த அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு விவா­க­ரத்து வழங்­கு­வதும் முடி­யா­தது என நீதி­பதி டக்ளஸ் ஜெர்லாக் தெரி­வித்­துள்ளார். அதே­வேளை, நீதி­மன்­றத்தின் இத்­தீர்­மா­னத்­துக்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் ஒரு பாலின திரு­மணம் செய்­து­கொண்­ட­வர்கள் என்­பது மாத்­திரம் கார­ண­மல்ல. இத்­தி­ரு­ம­ணத்­தின்­போது தோமஸ் பியட்டீ பாலின மாற்றம் செய்­து­ கொண்டு ஆணாக மாறி­யவர் என்­பதை அத்­த­ரப்­பினர் தவ­றி­ய­மையும் இத்­தீர்­மா­னத்­துக்கு காரணம் என நீதி­பதி கூறி­யுள்ளார்.

தான் ஆணாக மாறு­வ­தற்கு தோமஸ் பியட்டீ என்ன செய்தார் என்ன செய்­ய­வில்லை, என்­பதை அவர் ஒரு­போதும் விளக்­க­வில்லை என நீதி­பதி ஜெர்லாக் கூறி­யுள்ளார். நீதி­ப­தியின் இக்­க­ருத்து அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தா­கவும் இத்­தீர்ப்­புக்கு எதி­ராக தோமஸ் பியட்டீ மேன்­மு­றை­யீடு செய்யத் திட்­ட­மிட்­டுள்ளார் எனவும் பியட்­டீயின் பேச்­சா­ள­ரான ரையன் கோர்டன் கூறி­யுள்ளார். தோமஸ் பியட்டீ சட்­டபூர்வமாக ஓர் ஆணாக திரு­மணம் செய்தார் எனவும் ஆணாக மாறி­யபின் ஹவாயில் புதிய பிறப்புச் சான்­றி­த­ழுக்கு விண்­ணப்­பித்­த­போதோ சான்­றிதழ் வழங்­கப்­பட்­ட­போதோ பெண் இனப்­பெ­ருக்க அங்­கங்­களை அவர் கொண்­டி­ருக்­கிறார் என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு அவர் ஒரு­போதும் கோரப்­ப­ட­வில்லை. மற்­றொரு மாநி­லத்தில் நடை­பெற்ற திரு­ம­ணத்தை ஏற்­றுக்­கொள்ள நீதி­பதி மறுப்­பது துர­திஷ்­ட­வ­ச­மா­னது எனவும் கோர்டன் கூறினார்.

ட்ரேஸி லெ{ஹனாய் டகோன்­டினோ எனும் பெண்­ணாக ஹாவாய் மாநி­லத்தில் பிறந்­தவர் தோமஸ் பியட்டீ. 1997 ஆம் ஆண்டு ஆண்­க­ளுக்­கான டெஸ்­டொஸ்­டரோன் ஹோர்மோன் ஏற்­றிக்­கொள்ளும் சிகிச்சை செய்­து­கொள்ள ஆரம்­பித்தார். அவரின் இரு மார்­ப­கங்­களும் அகற்­றப்­பட்­டன. 2002ம் ஆண்டு அவரின் நெஞ்­சுப்­ப­குதி மற்­றொரு சத்­தி­ர­சி­கிச்சை மூலம் ஆண்­க­ளுக்­கு­ரிய தோற்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டது. பின்னர் தான் ஒரு ஆண் எனக் குறிப்­பிட்டு ஹவாய் மாநி­லத்தில் புதிய சாரதி அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுக்­ கொண்டார். நீதி­மன்றம் அவரின் பெயரை தோமஸ் என மாற்­றிக்­ கொள்ள அனு­மதி வழங்­கி­யது. 2003 ஆம் ஆண்டு முற்­ப­கு­தியில் நான்­ஸியை அவர் திரு­மணம் செய்­து­கொண்டார். நான்ஸி கருத்­த­ரிக்கும் ஆற்­றலை கொண்­டி­ருக்­க­வில்லை. அதனால், நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்ட உயி­ர­ணுக்கள் மூலம் செயற்கை முறையில் தானே கர்ப்பம் தரித்தார் தோமஸ் பியட்டீ. அதனால் அவர் ‘கர்ப்­பிணி ஆண்’ என அறி­யப்­ப­ட­லானார்.

தோமஸ் பியட்டீ இவ்வாறு 3 தடவை கர்ப்பம் தரித்து குழந்­தை­களைப் பெற்றார். அக்­கு­ழந்­தைகள் தற்­போது முறையே. 4,3,2 வய­து­டை­ய­வர்­க­ளாக உள்­ளனர். பின்னர் இவர்கள் அரி­ஸோனா மாநி­லத்­துக்கு இடம்­பெ­யர்ந்­தனர். தோமஸ் பியட்­டீ­யுடன் நான்ஸி வன்­மு­றை­யாக நடந்­து­கொள்ளும் வீடியோ ஆதா­ரங்கள் வெளி­வந்­ததால் பிள்­ளை­களை பரா­ம­ரிக்கும் உரி­மையை தோமஸ் பியட்டீக்கு நீதிமன்றம் வழங்கியது. தற்போது, ஆம்பர் நிகோல் எனும் பெண்ணை தோமஸ் பியட்டீ காதலித்து வருகிறார். ஆம்பருக்கு 43 வயதாகிறது. ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான ஆம்பருக்கு 22 மற்றும் 16 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ஆம்பருக்கு மீண்டும் கர்ப்பம் தரிக்கமுடியாவிட்டாலும் தானே மீண்டும் கர்ப்பம் தரிக்கத் தயார் என்கிறார் தோமஸ் பியட்டீ.

452_a

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி விசாரணை அதிகாரி கைது
Next post கொழும்பில் கணிதபாட ஆசிரியர் மாணவிமீது வல்லுறவு