போலி விசாரணை அதிகாரி கைது
போலியான விசாரணை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல்வாதியின் முன்னாள் இணைப்பு செயலராக இருந்த 57 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான விசாரணை அதிகாரியாக நடித்தே குறித்த சந்தேக நபர் மில்லியன் ரூபா கணக்கில் ஏமாற்றியதாக அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்