உயிருக்குப் போராடிய ஆட்டைக் காப்பாற்றிய இங்கிலாந்து பிரதமர்
சேற்றில் சிக்கி மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செம்மறி ஆட்டை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன். காப்பாற்றியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் கடந்த மாதம் ஒருவார இறுதியில் ஒக்ஸ்போர்டு ஷரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று இருந்தார்.
அப்போது மறைவிடத்தில் இருந்து ஒருசெம்மறி ஆட்டின் கதறல் சத்தம் கேட்டது. உடனே காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று பார்த்தபோது, அங்கு சதுப்பு நிலத்து சேற்றில் ஒரு பெண் செம்மறி ஆடு சிக்கி மூழ்கி கொண்டிருந்தது. அதனருகில் 2 குட்டிகளும் சத்தமிட்டு கொண்டிருந்தன.
உடனே பிரதமர் கெமரூன் தனது பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேருடன் சென்று சேற்றில் இறங்கி அந்த செம்மறி ஆட்டை பத்திரமாக மீட்டுள்ளார். இதனால் அவரது ஜீன்ஸ்பேண்ட் மற்றும் ஷூக்கள் அனைத்தும் சேறும் சகதியுமாகி விட்டிருந்தன. அதற்குள் ஆட்டை தேடிக்கொண்டு விவசாயி வந்து விட்டார். அவரிடம் அந்த ஆட்டையும், குட்டிகளையும் ஒப்படைத்து விட்டு பிரதமர் லண்டன் திரும்பியுள்ளார்.