மயிலை சுட்டு வீழ்த்தியவர் கைது
அம்பாறை, திருக்கோவில், காஞ்சரம்குடா வயலில் மயிலை சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய ஒருவரை நேற்று நள்ளிரவு திருக்கோயில் பொலீசார் கைது செய்துள்ளதுடன் சட்டவிரோத துப்பாக்கியையும் மீட்கப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலையடுத்து காஞ்சூரம்குடா வயல் பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு பொலிசார் சுற்றிவளைத்து காத்து நின்றபோது குறித்தநபர், துப்பாக்கியால் மயிலை சுட்டு வீழ்தத்தி அதனை எடுத்துக் கொண்டுவரும்போது பொலிசார் கைதுசெய்துள்ளனர். இவரை பொத்துவில் நீதிமன்றத்தில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.