கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி ஒருவர் படுகாயம்
கிளிநொச்சியில் இன்றுகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு விஸ்வமடு பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்சும் ஆட்டோவும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் தெய்வேந்திரகுமார் (வயது 66), அவரது மனைவியான சிறீரதி தெய்வேந்திரகுமார் (வயது 58) ஆகியோரே மரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஆட்டோ சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.