உலகின் முதற் தர குழந்தைகள் ஆபாசப்பட விநியோகஸ்தர் கைது
அமெரிக்காவைச் சேர்ந்த ‘உலகின் முதற் தர குழந்தைகள் ஆபாசப்பட விநியோகஸ்தர்’ ஒருவர், ஒரு மில்லினுக்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோன் செரன் என்ற 51 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் அமெரிக்காவின் ப்ளொரிடா மாநிலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து குழந்தைகள் ஆபாசப்படங்களை டீவீடீக்களுக்கு மாற்றிக்கொண்டிருக்கும் போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக குழந்தைகள் ஆபாசப்பட இணையத்தளங்கள் மூலமாக ஜோன் அவதானிக்கப்பட்டு வந்தார். இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும் போது 500 ஆயிரம் முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆபாசப் படங்களும் மற்றும் வீடியோக்களும் கைப்பற்றப்பட்டது.
இவரே உலகின் முதற் தர குழந்தைகள் ஆபாசப்பட விநியோகஸ்தராக இருக்க வேண்டும் என தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது இவர் மீது 15 வகையான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating