11 நாட்களாக பனிக்குள் புதைந்திருந்து கர்ப்பிணி ஆடு உயிருடன் மீட்பு
ஸ்கோட்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஆடொன்று 11 நாட்களாக பனிக்குள் புதைந்திருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ஷடவசமான சம்பவமொன்று தென்மேற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அளவுக்கதிமாக பனிப் பெய்து வருகிறது. இதனால் 11 நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணியான ஆடொன்று பனியில் புதையுண்டுள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளரான இளம் விவசாயி ஸ்ரூவர்ட் நேற்று அதனை உயிருடன் மீட்டுள்ளார்.
இது குறித்து 19 வயதான விவசாயி ஸ்ரூவர்ட் தனது பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு இதுவரையில் 14,500 லைக்குகள் கிடைத்துள்ளதுடன் பலத்த ஆதரவு கொமன்டுகளும் கிடைத்துள்ளது. ஸ்ரூவர்ட்டின் தந்தையும் சிறிய தந்தையும் 1800 ஆடுகளை வளர்க்கின்றனர். இதில் ஒன்றே குறித்த ஆடும்.
இதுவரையில் பனியினால் இவர்ளுடைய 60 ஆடுகள் தொலைந்துள்ளதாம். அதில் 15 ஆடுகளை இறந்த நிலையிலேயே மீட்டுள்ளனர். எனவே இந்த கர்ப்பிணி ஆடு உயிருடன் கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கர்ப்பிணி ஆட்டின் உடல் நிலை தேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள அசாத்திய பனிப்பொழிவில் 25 ஆயிரம் ஆடுகள் நேற்று வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.