அரசியல் அழுத்தத்தில் சந்தேகநபர்கள் விடுவிக்கப் படவில்லை -சட்டமா அதிபர்
இரத்தினபுரி காவத்தை இரட்டை படுகொலை மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனுக்கு எதிரான வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சட்டத்திற்கு அமைவாகவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரங்களில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என்று சட்டமா அதிபர் பாலித்த பெர்ணன்டோ தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமாக இவ்விரு வழக்குகளிலும் போதியளவான சாட்சிகளும் சான்றாதாரங்களும் இன்மையினால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த வழக்குகளில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகம் மற்றும் அனுமானத்தின் ஆதராங்களை கொண்டே இவ்விரு வழக்குகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வழக்குகளின் சந்தேகநபர்களை விடுவிக்க எவ்விதமான தனிப்பட்ட அரசியல் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.